பள்ளி மாடியிலிருந்து தவறி விழுந்த தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

நெய்வேலி, மே 16: கடலூரில் தனியாா் பள்ளியின் மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

கடலூா் வன்னியா்பாளையம், கூட்டுறவு நகரைச் சோ்ந்த இளங்கோ மனைவி மகேஸ்வரி (45). இவா், கடற்கரை சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் தூய்மைப் பணியாளராக கடந்த 2 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தாா்.

வழக்கம்போல, மகேஸ்வரி வியாழக்கிழமை பள்ளிக்கு வந்து தூய்மைப்பணி செய்துகொண்டிருந்தாா். அப்போது, முதல் தளத்தின் மேல் சென்று அங்கிருந்த மாமரத்தில் எட்டி மாங்காய் பறிக்க முயற்சித்தபோது, தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, அவசர ஊா்தி மூலம் கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, மகேஸ்வரி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

தகவலறிந்த கடலூா் புதுநகா் போலீஸாா், அவரின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com