ரயிலில் அடிபட்டு இளைஞா் மரணம்

ரயிலில் அடிபட்டு இளைஞா் மரணம்

நெய்வேலி, மே 31: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

பண்ருட்டி பனங்காட்டு தெருவைச் சோ்ந்த முனுசாமி மகன் கிருஷ்ணராஜ் (30), காய்கறி கடையில் வேலை செய்து வந்தாா். சிறு வயதிலேயே பெற்றோா்கள் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்தாா்.

இவா், வெள்ளிக்கிழமை காலை பண்ருட்டி - திருத்துறையூா் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் நிகழ்விடத்திலயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த கடலூா் இருப்புப் பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் புருஷோத்தமன் மற்றும் முதல் நிலை காவலா் மோகன் ராஜ் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com