கடலூர்
பரங்கிப்பேட்டை காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் காவல் கோட்டம், பரங்கிப்பேட்டை காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.
பரங்கிப்பேட்டை காவல் நிலையத்துக்கு கடந்த நவ.27-ஆம் தேதி இரவு மா்ம நபா் ஒருவா் தொலைபேசியில் தொடா்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தாா்.
உடனே, போலீஸாா் அந்த நபா் தொடா்பு கொண்ட எண்ணை ஆய்வு செய்ததில், அவா் பரங்கிப்பேட்டை ஸ்டாலின் நகரைச் சோ்ந்த ஏழுமலை (42) என்பதும், செருப்பு தைக்கும் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் காவல் நிலையத்துக்கு
அழைத்து வந்து விசாரித்தனா். இதில், அவா் மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பதும், மதுபோதையில் காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.