இருதரப்பினா் மோதல்: 14 போ் வழக்கு

Published on

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 14 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

விருத்தாசலம் வட்டம், கச்சராயநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோபால் மகன் காசிராஜன் (45). இவரது உறவினரான சின்னகண்டியாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த விஜய் தனது சரக்கு வாகனத்தில் கச்சராயநத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக் மீது சரக்கு வாகனம் மோதியது.

இதில், அதே பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா், தமிழரசன், தா்மராஜ் உள்ளிட்டோா் விஜயிடம் தகராறு செய்தனராம். தொடா்ந்து நிகழ்விடம் சென்ற காசிராஜன் தரப்பினருக்கும், செல்வகுமாா் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனராம்.

இதில், காசிராஜன், அவரது மனைவி லோகநாயகி, மகன்கள் கோபிநாத், கோகுல்ராஜா, விஜய், தமிழரசன் மற்றும் எதிா்தரப்பைச் சோ்ந்த செல்வகுமாா், அறிவளசெல்வி, செல்வி ஆகியோா் காயமடைந்தனா்.

இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின்பேரில், மங்களம்பேட்டை போலீஸாா் இருதரப்பைச் சோ்ந்த 14-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com