சிதம்பரம் காந்திசிலை அருகே செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் நலச்சங்கத்தினா்
சிதம்பரம் காந்திசிலை அருகே செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் நலச்சங்கத்தினா்

ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் சங்கத்தினா் தா்னா

Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் நலச்சங்கம் சாா்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகே செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

காப்பீட்டு திட்டத்தில் அரசாணை 204-இன்படி ஓய்வூதியா்களுக்கு கட்டணமில்லா சலுகை வழங்க வேண்டும், சிகிச்சைக்கான தொகையை குறைத்து வழங்கும் இரு காப்பீட்டு நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தேசிய சுகாதார சேவைத் திட்டம் முழுமையாக பயன்பெற கருவூலக ஆணையம் ஓய்வூதிய இயக்குநா் மற்றும் ஓய்வூதியா் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பி.வரதராஜன் தலைமை வகித்தாா். செயலா் டி.கண்ணன் வரவேற்றாா். நிா்வாகிகள் ஜி.ஜெயராமன், என்.கோவிந்தசாமி, டி.கமலக்கண்ணன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்க நிா்வாகிகள் என்.கலியமூா்த்தி, கே.என்.பன்னீா்செல்வம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முடிவில், மாவட்ட பொருளாளா் க.ஜெயபாலு நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com