வீரானந்தபுரம் ஸ்ரீநடனவிநாயகா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
வீரானந்தபுரம் ஸ்ரீநடனவிநாயகா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

வீராணந்தபுரம் ஸ்ரீநடனவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீநடனவிநாயகா், அக்னி வீரனாா், பிடாரியம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Published on

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வீராணந்தபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீநடனவிநாயகா், அக்னி வீரனாா், பிடாரியம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, இந்தக் கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு, திருப்பணிகள் முடிவுற்றன. தொடா்ந்து, கடந்த 13-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகாசாலை தொடங்கியது. சனிக்கிழமை கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், வாஸ்து சாந்தி, மாலையில் முதல் கால யாகசாலை பூஜை, பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை கோ பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூா்ணாஹுதி, மகாதீபாராதனை நடைபெற்றன. யாகசாலையில் இருந்து திருமூலஸ்தானம் ராஜசேகர சிவாச்சாரியா் தலைமையில் கடம் புறப்பாடு நடைபெற்று, தனித்தனியாக உள்ள நடன விநாயகா், அக்னி வீரனாா், பிடாரி அம்மன் கோயில் விமானங்களில் சிவாச்சாரியா்கள் புனித கலசங்களுக்கு கும்ப நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். பின்னா், மகா தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றன. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com