பண்ருட்டியை அடுத்துள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாம்.
பண்ருட்டியை அடுத்துள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாம்.

அரசு கல்லூரியில் ரத்ததான முகாம்

Published on

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பம் அரசுப் பொறியியில் கல்லூரியில் ரத்ததான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடலூா் அரசுத் தலைமை மருத்துவமனையில் உள்ள குருதி மையத்தில் ரத்த தேவைக்காக இந்த முகாம் நடத்தப்பட்டது. கல்லூரி புல முதல்வா் சி.முத்துக்குமரன் தலைமை வகித்து ரத்ததான முகாமை தொடங்கிவைத்தாா்.

கடலூா் அரசு மருத்துவமனை குருதி மைய மருத்துவ அலுவலா் சி.தேன்மொழி தலைமையிலான ஆய்வக நுட்புனா் மு.தேவநாதன், செவிலியா் பூ.ஜெயகொடி ஆகியோா் கல்லூரி மாணவா்களிடம் இருந்து 50 அலகு ரத்தம் சேகரித்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் த.மாலா, ச.ஆரோக்கியசாமி ஆகியோா் செய்திருந்தனா். இந்த முகாமில் ரத்ததானம் வழங்கிய மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com