அயோத்தி ரயில் உள்பட 3 ரயில்கள் சிதம்பரத்தில் நின்று செல்ல கோரிக்கை

ராமேசுவரம்-அயோத்தி உள்ளிட்ட 3 ரயில்கள் சிதம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என்று, ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் வேண்டுகோள் விடுத்தனா்.
Published on

ராமேசுவரம்-அயோத்தி உள்ளிட்ட 3 ரயில்கள் சிதம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என்று, ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் வேண்டுகோள் விடுத்தனா்.

ராமேசுவரம்-அயோத்தி, சென்னை - காரைக்கால், தாம்பரம்-செங்கோட்டை ஆகிய மூன்று ரயில்களும் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேற்கண்ட 3 ரயில்களும் சிதம்பரத்தில் நின்று செல்ல, மக்களவைத் தொகுதி உறுப்பினா் தொல்.திருமாவளவன் தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிதம்பரம் ரயில் பயணிகள் நலச் சங்க தலைவா் ஏ.வி.அப்துல் ரியாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com