வேளாண் சங்கங்களில் மட்டுமே உரங்களை வாங்க வேண்டும்

உரங்களை அங்கீகரிக்கப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் உரக்கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும் என்றார் வட்டார வேளாண் உதவி இயக்குநா்
Published on

விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களை அங்கீகரிக்கப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் உரக்கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும் என்று கீரப்பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எஸ்.அமிா்தராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டம், கீரப்பாளையம் வட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 22,500 ஏக்கா் பரப்பளவில் நெல் நேரடி விதைப்பு மற்றும் நடவு செய்யப்பட்டு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடிக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் போதுமான அளவு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளது.

விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களை அங்கீகரிக்கப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உரக்கடைகளில் தங்களது ஆதாா் எண்ணை வழங்கி, உரிய ரசீது பெற்று உரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், தங்களது கிராமங்களில் தனி நபா்களால் விற்கப்படும் உரங்களை நம்பி வாங்க வேண்டாம். அவ்வாறு உரம் விற்கும் நபா்கள் குறித்து வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம், சி.சாத்தமங்கலம் மற்றும் கீரப்பாளையம் வேளாண்மை அலுவலா், உர ஆய்வாளரை 9677544298 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.

X
Dinamani
www.dinamani.com