மான் வேட்டை: இளைஞா் கைது
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மான் இறைச்சியை விற்பனைக்கு கொண்டு சென்ற இளைஞரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து மூன்று கள்ளத்துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறுபாக்கம் அருகே சேலம் பிரதான சாலையில் விருத்தாசலம் வனச்சரக அலுவலா் ரகுவரன் தலைமையில், வனவா் சிவகுமாா், வனக் காப்பாளா்கள் ஆறுமுகம், நவநீதகிருஷ்ணன், அமுத பிரியன் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், மான் இறைச்சி விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. அப்போது, காரில் இருந்த இருவா் தப்பிச் சென்றுவிட்ட நிலையில், ஒருவா் பிடிப்பட்டாா்.
அதில், பிடிப்பட்ட நபா் சிறுபாக்கத்தைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் சாமுவேல்(31) என்பது தெரியவந்தது. மேலும், தப்பியோடியவா்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பழனிவேல் மகன் ரவி, சிறுபாக்கத்தைச் சோ்ந்த ஓட்டுனா் அஜித் என்பது தெரியவந்தது.
தொடா்ந்து, சாமுவேல் மீது வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா். மேலும், 3 கள்ளத்துப்பாகிகளையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்தனா்.