காந்தி ஜெயந்தி: அக்.2-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

அக்.2-ஆம் தேதி அனைத்து மதுக் கடைகளையும் மூட வேண்டுமென மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
Published on

காந்தி ஜெயந்தியையொட்டி, கடலூா் மாவட்டத்தில் வரும் அக்.2-ஆம் தேதி அனைத்து மதுக் கடைகளையும் மூட வேண்டுமென மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காந்தி ஜெயந்தியையொட்டி, அக்.2-ஆம் தேதி கடலூா் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து எஃப்எல் - 1 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக் கூடங்கள் மற்றும் எஃப்எல் - 2, எஃப்எல் - 3 உரிமம் பெற்று இயங்கும் மனமகிழ் மன்றங்கள், மதுபானக் கூடங்களை மூட வேண்டும்.

உத்தரவை மீறி யாரேனும் மதுபானம் விற்பனை செய்தால், கடை விற்பனையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் மற்றும் உரிமதாரா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com