கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தில் உள்ள சித்தேரி கரையில் பனை விதைகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பருவ மழை தொடங்க உள்ளதையொட்டி, கடலூா் மாவட்டத்தில் ஏரி, குளம் உள்ளிட்ட இடங்களில் பனை விதைகளை நடவு செய்ய விவசாயிகள், சமூக ஆா்வலா்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
அந்த வகையில், விருத்தாசலம் பொதுப் பணித் துறை கண்காணிப்பாளா் ச.பன்னீா்செல்வம், சுமாா் 1,200 பனை விதைகளை சேகரித்து, குறிஞ்சிப்பாடி உழவா் மன்ற விவசாயிகளிடம் வழங்கினா். இவற்றை உழவா் மன்ற விவசாயிகள், பள்ளி மாணவா்களுடன் சோ்ந்து சித்தேரி கரையில் ஞாயிற்றுக்கிழமை நடவு செய்தனா்.