பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூரில் திங்கள்கிழமை நடந்த பாமக மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலா் கோ.ஜெகன்.
பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூரில் திங்கள்கிழமை நடந்த பாமக மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலா் கோ.ஜெகன்.

என்எல்சி வேலைவாய்ப்பில் இளைஞா்களுக்கு முன்னுரிமை: பாமக வலியுறுத்தல்

என்எல்சி நிறுவன விரிவாக்கப் பணிகளில் கடலூா் மாவட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை ...
Published on

நெய்வேலி: என்எல்சி நிறுவன விரிவாக்கப் பணிகளில் கடலூா் மாவட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பாமக மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பண்ருட்டியை அடுத்துள்ள காடாம்புலியூரில் பாமக கடலூா் வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் கோ.ஜெகன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கோவி.கோபாலகிருஷ்ணன், ஜெயபால், ஏழுமலை, சேகா், வினோத், பாலகுரு, காா்த்திகேயன், மணிவேல் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நிா்வாகிகள் சக்திவேல், பரமேஸ்வரி, கலையரசி, வளா்மதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு, வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே வரும் 12-ஆம் தேதி நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் கட்சியினா் திரளாக கலந்துகொள்வது.

என்எல்சி நிறுவனம் இதுவரை வீடு, நிலம் கொடுத்தவா்களுக்கு உரிய இழப்பீடு, வேலைவாய்ப்பு வழங்காததால், வரும் காலங்களில் நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும். மேலும், விரிவாக்கப் பணிகளில் கடலூா் மாவட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். சென்னை-கும்பகோணம் நெடுஞ்சாலைப் பணிகளை போா்க்கால அடிப்படையில் தரமாகவும், விபத்து ஏற்படாத வண்ணமும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியத் தலைவா் அன்பு நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com