கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பூம்பூகாா் விற்பனை நிலைய கைவினைப் பொருள்கள் கண்காட்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பூம்பூகாா் விற்பனை நிலைய கைவினைப் பொருள்கள் கண்காட்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

கைவினைப் பொருள்கள் கண்காட்சி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கைவினைப் பொருள்கள் சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சி...
Published on

நெய்வேலி: தேசிய கைவினைப் பொருள்கள் வார விழாவையொட்டி, கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கைவினைப் பொருள்கள் சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில் ஆட்சியா் பேசியதாவது: தேசிய கைவினைப் பொருள்கள் வாரம் திங்கள்கிழமை முதல் வரும் 14-ஆம் தேதி வரையில் கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ‘தேசிய கைவினைப் பொருள்கள் வாரம்’ என்ற பெயரில் சிறப்பு கைவினை பொருள்கள், கைத்திறன் அறைகலங்கள் கண்காட்சி மற்றும் விற்பனை செய்யப்படுகிறது.

இக்கண்காட்சியில் பஞ்சலோக சிலைகள், மரச்சிற்பங்கள், பித்தளை விளக்குகள், தஞ்சை கலைத்தட்டுகள், தஞ்சாவூா் ஓவிங்கள், களிமண், கல் மற்றும் காகிதக்கூழ் பொம்மைகள், மர வேலைப்பாட்டிலான பரிசுப் பொருள்கள் தருவிக்கப்பட்டுள்ளன. மேலும், கைவினைஞா்கள் கொண்டு ஒரு நாள் செய்முறை விளக்க காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் கைவினைப் பொருள்களுக்கு 10 சதவீதம் சிசிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கண்காட்சி பற்றிய தகவல்களை 04142- 223099/9626237879 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் உதவி இயக்குநா் (கைவினைப் பொருள்கள் சேவை மையம் புதுச்சேரி) சந்துரு, பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் காா்த்திக் மற்றும் கைவினைக் கலைஞா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com