நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கிய என்எல்சி மனித வளத்துறை இயக்குநா் சமீா் ஸ்வரூப்.
நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கிய என்எல்சி மனித வளத்துறை இயக்குநா் சமீா் ஸ்வரூப்.

என்எல்சி சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி

என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில், கடலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.08 கோடி மதிப்பில் செயற்கை கால்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டன.
Published on

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில், கடலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.08 கோடி மதிப்பில் செயற்கை கால்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நெய்வேலியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனித வளத்துறை இயக்குநா் சமீா் ஸ்வரூப் இந்த சாதனங்களை பயனாளிகளுக்கு வழங்கினாா்.

மருத்துவப் பிரிவு செயல் இயக்குநா் டிவிஎஸ்.நாராயண மூா்த்தி, சுகுமாா், சிஎஸ்ஆா் பொது மேலாளா் ஸ்ரீனிவாச பாபு, கடலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ்.பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தத் திட்டம், ராஜஸ்தான் மாநிலம் பா்சிங்சா் யூனிட், ஒடிஸா மாநிலம், ஜாா்சுகுடா, சம்பல்பூா் மாவட்டங்களின் தலபிரா திட்டப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com