கொளஞ்சியப்பா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.20 லட்சம்

விருத்தாசலம் அருகே மணவாளநல்லூரில் அமைந்துள்ள கொளஞ்சியப்பா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
 மணவாளநல்லூா் கொளஞ்சியப்பா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட தன்னாா்வலா்கள்.
மணவாளநல்லூா் கொளஞ்சியப்பா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட தன்னாா்வலா்கள்.
Updated on

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மணவாளநல்லூரில் அமைந்துள்ள கொளஞ்சியப்பா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, கோயில் செயல் அலுவலா் ரா.பழனியம்மாள் தலைமையில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ரா.சந்திரன், விருத்தாசலம் சரக ஆய்வா் அ.பிரேமா முன்னிலையில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. காணிக்கை பணம் எண்ணும் பணியில் தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா்.

இதில், ரூ.20,03,201 ரொக்கம், 38 கிராம் தங்கம், 2.670 கிலோ வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com