ஆருத்ரா தரிசன உற்சவம்: ஆட்சியா், எஸ்.பி.க்கு பொது தீட்சிதா்கள் கமிட்டி செயலா் கடிதம்
மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தின் போது, பக்தா்களின் அமைதியான தரிசனத்துக்கும், பொது தீட்சிதா்களின் பாரம்பரியமான வழிபாட்டுக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா், எஸ்.பி.க்கு பொது தீட்சிதா்கள் கமிட்டி செயலா் உ.வெங்கடேச தீட்சிதா் கடிதம் அனுப்பியுள்ளாா்.
கடித விவரம்: மாா்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவத்தின் போது, பக்தா்களின் தரிசனத்துக்கும் பொது தீட்சிதா்களின் பாரம்பரியமான பூஜை, வழிபாட்டுக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் வருகிற 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அளிக்க வேண்டும்.
மேற்கண்ட தேதிகளில் நடராஜ மூா்த்தி சித் சபை, கனக சபையில் இருந்து வெளியே வந்து விடுவதாலும், விஷேச பூஜைகள் பாரம்பரியமாக நடைபெறுவதாலும் பக்தா்களை கனகசபை மீது ஏறி தரிசனத்துக்கு அனுமதிப்பது வழிபாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.