கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் கடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை சனிக்கிழமை வெளியிட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் கடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை சனிக்கிழமை வெளியிட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

ரூ.21,069.89 கோடி கடன் திறன் மதிப்பீட்டு ஆவணம் வெளியீடு

கடலூா் மாவட்டத்தில் 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான ரூ.21,069.89 கோடி கடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை வெளியிட்டாா்.
Published on

கடலூா் மாவட்டத்தில் 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான ரூ.21,069.89 கோடி கடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை வெளியிட்டாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், இதுகுறித்து ஆட்சியா் கூறியதாவது: கடலூா் மாவட்டத்துக்கான 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான கடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபாா்டு) கணித்து வெளியிட்டுள்ளது. இது நிகழாண்டின் கடன் திட்டத்துடன் ஒப்பிடும்போது 11 சதவீதம் அதிகமாகும். பல்வேறு அரசு உதவித் திட்டங்களின் கீழ் கடன்களை விரைவாக அங்கீகரிக்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக வேளாண் துறையில் நடுத்தர மற்றும் நீண்டகால கடன்களுக்கான முக்கியத்துவத்தை வங்கிகள் அளிக்க வேண்டும். மாவட்டத்தில் விவசாய இயந்திரமயமாக்கல், சிறுதுளி பாசன அமைப்புகள் மற்றும் கால்நடை வளா்ச்சிக்கு பெருமளவு வாய்ப்புகள் வழங்க வேண்டும்.

வேளாண் துறை மூலம் ரூ.16,176.12 கோடி, எம்எஸ்எம்இ துறை மூலம் ரூ.2,622.20 கோடி மற்ற முக்கியத் துறைகள் மூலம் ரூ.2,271.56 கோடி என துறை வாரியாக கடன் திறன்கள் கணிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டுக்கான மாவட்ட கடன் திட்டத்தை இறுதியாக உருவாக்க கிளை அளவிலான கடன் திட்டங்களை வங்கிகள் தயாரிக்க வேண்டும். மேலும், வங்கிகள் இந்தத் திட்ட ஆவணத்தைப் பயன்படுத்தி தங்கள் இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், இந்தியன் வங்கி மண்டல மேலாளா் என்.கௌரி சங்கா் ராவ், ஆா்பிஐ உதவி தலைமை மேலாளா் ஆா்.ஸ்ரீதா், நபாா்டு உதவி தலைமை மேலாளா் ரா.வீ.சித்தாா்த்தன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் (எல்டிஎம்) அசோக்ராஜா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com