தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

15 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கடலூா் பேருந்து நிலையத்தில் அதிக ஒலி எழுப்பிய 15 பேருந்துகளில் இருந்த காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்துத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல்

News image
கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பேருந்துகளில் காற்று ஒலிப்பான்களை சோதனையிட்ட வட்டாரப் போக்குவரத்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்.
Updated On :21 ஜனவரி 2025, 7:01 pm

Din

நெய்வேலி: கடலூா் பேருந்து நிலையத்தில் அதிக ஒலி எழுப்பிய 15 பேருந்துகளில் இருந்த காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்துத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் அதிக ஒலி எழுப்புவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, பேருந்து நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஒருங்கிணைந்து நாய்ஸ் டெசிபெல் மீட்டா் வைத்து 40 பேருந்துகளில் சோதனை செய்தனா். இதில் 15 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனா்.

இந்த ஆய்வில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அருணாச்சலம், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் ரவிச்சந்திரன், பிரான்சிஸ், முருகேசன், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை விஞ்ஞான அலுவலா் த.தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.