கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் உடைப்பு சீரமைப்பு

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் உடைப்பு சீரமைப்பு

Published on

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது.

சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி - அனுவம்பட்டு சாலையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் புதைக்கப்பட்டுள்ள குழாய்கள் உடைந்து பல மாதங்களாக தண்ணீா் வீணாகி வயல்களிலும், சாலையிலும் தேங்கி சேதம் ஏற்பட்டது.

இது தொடா்பாக தினமணியில் கடந்த 22-ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவின்பேரில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் பரங்கிப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா், அதிகாரிகள் இணைந்து கொள்ளிடம் கூட்டு குடிநீா்த் திட்ட குழாய் உடைப்பை சீரமைத்தனா். மேலும், சாலையில் நீா் தேங்கி இருந்த பள்ளங்களை மணல் கொண்டு நிரப்பி சீா் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com