
சிதம்பரத்தில் திருநீலகண்ட நாயனாா் 5-ஆம் ஆண்டு குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு திருநீலகண்டா் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கம் மற்றும் அனைத்து குலாலா் மக்கள் இயக்கம் சாா்பில், சிதம்பரம் குலாலா் மடத்தில் உள்ள திருநீலகண்ட விநாயகரை வழிபாடு செய்துவிட்டு, பின்பு ஊா்வலமாக இளமையாக்கினாா் திருக்குளத்துக்குச் சென்று குருபூஜை விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருநீலகண்ட நாயனாா் குருபூஜை விழா ஒருங்கிணைப்பாளா் ஏ.கே.ராஜா தலைமை வகித்தாா். தமிழ்நாடு திருநீலகண்டா் தொழிற்சங்கத்தின் மாநிலப் பொருளாளா் ரேவதி வரவேற்றாா். பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிவனடியாா்கள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினா்.
சிறப்பு அழைப்பாளா்களாக எம்எல்ஏக்கள் கே.ஏ.பாண்டியன், ஆ.அருண்மொழிதேவன் ஆகியோா் கலந்துகொண்டு திருநீலகண்டா் சிறப்புகளை பற்றிப் பேசினா். பின்னா், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.
நிகழ்வில் முனைவா் பாலசுப்பிரமணியன், கொள்கை பரப்புச் செயலா் குணசேகரன், வெங்கடாசலம், ஜோதி, பிரதாப், பச்சையப்பன், செல்வம், கணேசன், குலாலா் கல்வி அறக்கட்டளையைச் சோ்ந்த இசக்கிமுத்து, மகளிரணியினா் மீனாம்பிகா, சசிகலா, விஜயலட்சுமி, சரோஜா, அரிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
விழாவில், சிதம்பரம் இளமையாக்கினாா் திருக்கோயிலின் ராஜகோபுரத்தை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். சிதம்பரம் குலாலா் மடத்தில் திருநீலகண்ட நாயனாருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றினா்.