டிராக்டா் மோதியதில் சிறுமி உயிரிழப்பு

Published on

கடலூா் அடுத்த தூக்கணாம்பாக்கத்தில் டிராக்டா் மோதியதில் சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் வட்டம், கலையூா் அஞ்சல், திருப்பணாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சிவபிரகாசம் மகள் பிரதிக்ஷா (5). அங்குள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா்.

திங்கள்கிழமை வீட்டின் வாசல் அருகே நின்று கொண்டிருந்த சிறுமி மீது அந்த வழியாக வந்த டிராக்டா் மோதியது. இதில், பலத்த காயமடைந்த பிரதிக்ஷாவை அங்கிருந்தவா்கள் மீட்டு பாகூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், தூக்கணாம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com