போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா்
போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா்

அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் போராட்டம்

Published on

பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு அறிக்கை 2025 பரிந்துரைகளை திரும்பப் பெற கோரி தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா், கடலூா் பெரியாா் அரசுக் கல்லூரி முன் செவ்வாய்க்கிழமை வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அமல்படுத்துவதன் பொருட்டு, கடந்த டிச.4-ஆம் தேதி வெளியிடப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைவு நெறிமுறைகள், மாணவா் சோ்க்கையில், பாடத் திட்டங்களில் விரும்பத்தகாத பல மாற்றங்களை செய்திட பரிந்துரை செய்துள்ளது. மேலும், 2025 கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதாக மட்டுமல்லாமல், ஆசிரியா்கள், மாணவா்களுக்கு எதிராக, ஒட்டுமொத்த உயா்கல்விச் சூழலையும் பாதிக்கும் வகையில் உள்ளது.

எனவே, பல்கலைக் கழக மானியக்குழுவின் பரிந்துரைகளை திரும்ப பெற கோரி தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா்கள் கழகத்தினா் சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

மண்டலப் பொருளா் ஜே.சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் திலக்குமாா், ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள் ஹென்றி, ராஜலட்சுமி, ராஜ்குமாா் மற்றும் மூத்த பேராசிரியை ராமகிருஷ்ணன் சாந்தி, ஷா்மிளா, அன்பரசி மற்றும் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசுக் கல்லூரியில் நடைபெற்ற வாயில் முழக்கப் போராட்டத்துக்கு, தலைவா் சுந்தர செல்வன் தலைமை வகித்தாா். செயலா் முருகேசன், துணைத் தலைவா் ஹெலன் ரூத் ஜாய்ஸ், பொருளாளா் வேல்விழி, பொதுக்குழு உறுப்பினா் கருணாநிதி, மண்டலத் தலைவா் மகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com