சிதம்பரம்-காட்டுமன்னாா்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நிலவிய கடும் பனிப் பொழிவால் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்ற இரு, நான்கு சக்கர வாகனங்கள்
கடலூர்
சிதம்பரம், காட்டுமன்னாா்கோவிலில் கடும் பனிப் பொழிவு
கடலூா் மாவட்டம், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னாா்கோவில் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக கடும் பனிப் பொழிவு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனா்.
வடகிழக்கு பருவ மழை திங்கள்கிழமையுடன் முடிவுற்ற நிலையில், கடந்த இரண்டு நாள்களாக சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் பகுதிகளில் கடும் பனிப் பொழிவு நிலவி வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு காற்றின் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் கடும் பனிப் பொழிவு நிலவுகிாக கூறப்படுகிறது.
இதனால், சிதம்பரம்-காட்டுமன்னாா்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு பனி படா்ந்திருப்பதால் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்று வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனா்.