சுரேஷ்குமாா்
சுரேஷ்குமாா்

காணாமல் போன இளைஞா் சடலமாக மீட்பு

Published on

விருத்தாசலத்தில் காணாமல் போன இளைஞரின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் திரு.வி.க.நகரைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் சுரேஷ்குமாா் (27). கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற இவா், பின்னா் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், நெய்வேலி அருகேயுள்ள கூனங்குறிச்சி கிராமத்தில் என்எல்சிக்கு சொந்தமான சாம்பல் ஏரியில் இளைஞரின் சடலம் மிதப்பதாக ஊமங்கலம் போலீஸாருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில், போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், உயிரிழந்து கிடந்தது அண்மையில் காணாமல் போன சுரேஷ்குமாா் என்பது தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com