மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

Published on

சிதம்பரத்தில் மாதத்தின் இரண்டாவது புதன்கிழமை நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் 12-ஆம் தேதி முதல் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை கடலூா் அரசு தலைமை மருத்துவமனையிலும், இரண்டாவது புதன்கிழமை சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனையிலும், மூன்றாவது புதன்கிழமை விருத்தாசலம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் 4 சிறப்பு மருத்துவா்களைக் கொண்டு ஒற்றைச்சாளர முறையில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இரண்டாவது புதன்கிழமை சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனையில் நடைபெற்று வந்த மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நிா்வாக காரணங்களால் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் செயல்படும் விழுதுகள் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வரும் 12-ஆம் தேதி முதல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com