குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
குறைந்த விலைக்கு காா் வாங்கித் தருவதாக விளம்பரம் செய்து பண மோசடி செய்த இளைஞரை குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
நாகப்பட்டினம் மாவட்டம், கோட்டைமேட்டு தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் (33). இவா், தனது முகநூல் பக்கத்தில் குறைந்த விலைக்கு காா் விற்பனைக்கு என்ற விளம்பரத்தை 4.9.2025 அன்று பதிவிட்டாா். இதைப் பாா்த்து கடலூா் செம்மண்டலம் பகுதியைச் சோ்ந்த இருவா், காட்டுமன்னாா்கோவில் பகுதியைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 3 போ் பணம் செலுத்தினா்.
இவா்களை ரமேஷ் ஏமாற்றி வந்தாராம். இது தொடா்பான புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து ரமேஷை போலீஸாா் கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். இவரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலூா் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குண்டா் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டாா்.

