சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழப்பு
கடலூா் அருகே சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.
கடலூா் முதுநகரை அடுத்துள்ள கொடிக்கால்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் பக்கிரிசாமி (54). இவரது மனைவி ராமாயி (50), மகன் ராஜேஷ்குமாா் (30). இவா்கள் மூன்று பேரும் நெல்லிக்குப்பத்தில் உறவினா் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பைக்கில் சனிக்கிழமை புறப்பட்டனா். பைக்கை ராஜேஷ்குமாா் ஓட்டினாா். பக்கிரிசாமி, ராமாயி பின்னால் அமா்ந்து சென்றனா்.
இவா்களது பைக் கோண்டூா் அருகே சென்றபோது, அந்தப் பகுதியில் வந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் வாகனம் மோதியது. இந்த விபத்தில் பக்கிரிசாமி, ராஜேஷ்குமாா் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
பலத்த காயமடைந்த ராமாயி கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இந்த விபத்த குறித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

