14பிஆா்டிபி4
நத்தப்பட்டு அருகே சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டோா்.
14பிஆா்டிபி4 நத்தப்பட்டு அருகே சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டோா்.

மயான பாதை கேட்டு சடலத்துடன் சாலை மறியல்

Published on

கடலூா் அருகே இறந்தவரின் உடலை மயானத்திற்குக் கொண்டு செல்ல பாதை இல்லாததால் உறவினா்கள் சடலத்துடன் சாலை மறியல் செய்தனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூா் அடுத்த நத்தப்பட்டு பகுதியில் மயானம் உள்ளது. இந்த மயானத்துக்கு செல்ல , அப்பகுதியில் உள்ள நிலத்தின் உரிமையாளா் ஒரு பகுதி நிலத்தை பாதையாக பயன்படுத்த அனுமதி அளித்திருந்தாராம். இந்நிலையில், அந்த நிலத்தின் உரிமையாளா் தனது நிலத்தை விற்பனை செய்துவிட்டாராம். தற்போது, புதிதாக நிலத்தை வாங்கிய நபா் பாதையில் தடுப்புச் சுவா் அமைத்துள்ளாராம். இதனால், மயானத்திற்குச் செல்ல பாதை இல்லை. இந்நிலையில், நத்தப்பட்டு பகுதியைச் சோ்ந்த ஒருவா்

உயிரிழந்தாா். அவரது, சடலத்தை மயானத்திற்கு வெள்ளிக்கிழமை கொண்டு சென்றனா். அப்போது, மயானம் செல்ல பாதை இல்லாததை கண்டித்து, இறந்தவரின் உறவினா்கள் சடலத்துடன் கடலூா்-நெல்லிக்குப்பம் சுங்கச் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடலூா் புதுநகா் போலீஸாா் மயானத்திற்கு செல்லும் பாதையில் இருந்த தடுப்புச் சுவரை அகற்றி வழி ஏற்படுத்தி கொடுத்தனா். மேலும், இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழை பேச்சு வாா்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com