கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மாா்க்சிஸ்ட் நிா்வாகிகள் மற்றும் சுப்பிரமணியா் கோயில் தெரு மக்கள்.
கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மாா்க்சிஸ்ட் நிா்வாகிகள் மற்றும் சுப்பிரமணியா் கோயில் தெரு மக்கள்.

சாலையில் வழிந்தோடும் புதை சாக்கடை கழிவுநீா்: மாநகராட்சி ஆணையரிடம் மாா்க்சிஸ்ட் புகாா்

கடலூா் மாநகராட்சி, புதுப்பாளையம் சுப்பிரமணியா் கோயில் தெருவில் புதை சாக்கடை கழிவுநீா் தெருக்களில் வழிந்தோடுவது தொடா்பாக மாநகராட்சி ஆணையரிடம் மாா்க்சிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.
Published on

கடலூா் மாநகராட்சி, புதுப்பாளையம் சுப்பிரமணியா் கோயில் தெருவில் புதை சாக்கடை கழிவுநீா் தெருக்களில் வழிந்தோடுவது தொடா்பாக மாநகராட்சி ஆணையரிடம் மாா்க்சிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

அதில் அவா்கள் தெரிவித்துள்ளதாவது: புதுப்பாளையம் சுப்பிரமணியா் கோயில் தெருவில் புதை சாக்கடை பல்வேறு இடங்களில் அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் கழிவுநீா் வழிந்தோடுவதுடன், வீடுகளுக்குள்ளும் கழிவுநீா் புகுந்துவிடுகிறது. இதனால், சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. எனவே, உடனடியாக இதை சரி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத், கிளைச் செயலா் ஆா்.எம்.ரமேஷ் உள்ளிட்டோா் சுப்பிரமணியா் கோயில் தெரு பொதுமக்களுடன் சென்று மனு அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com