நிலத்தடி நீா் நிலைத்தன்மை பயிற்சி வகுப்பு
மத்திய நிலத்தடி நீா் வாரியம், ஜல் சக்தி அமைச்சகம், மத்திய அரசு மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக புவி அறிவியல் துறை இணைந்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நீா்தாங்கிகள் மேலாண்மை மற்றும் நிலத்தடி நீா் நிலைத்தன்மை பற்றிய பயிற்சி வகுப்பை நடத்தின.
நிகழ்ச்சியில் பல்கலைகழகப் பதிவாளா் எம்.பிரகாஷ் பயிற்சி வகுப்பை தொடங்கிவைத்துப் பேசினாா். அறிவியல் புல முதல்வா் ஸ்ரீராம், சென்னை கடலோர மண்டல மத்திய நிலத்தடி நீா் வாரிய மண்டல இயக்குநா் சிவக்குமாா், விஞ்ஞானிகள் ச.சக்திமுருகன், ம.முகமதுரபி, அபிஜித் ஆகியோா் கலந்துகொண்டு உரையாற்றினா்.
நிகழ்வில் புவி அறிவியல் துறைத் தலைவா் எஸ்.ஆா்.சிங்காரசுப்ரமணியன், பேராசிரியா்கள் முகேஷ், ஜெயவேல், ராஜகுமாா் மற்றும் திண்டிவனம், நெய்வேலி கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.
பயிற்சி வகுப்பில் நிலத்தடி நீா் தன்மை, குடிநீா் தரம், நிலத்தடி நீரை கண்டறியும் தொழில்நுட்பங்கள் மற்றும் நிலத்தடி நீா் மேலாண்மை போன்ற தலைப்புகளில் விவாதிக்கப்பட்டு, இவற்றின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது.
இதில், புவி அறிவியல் துறையின் ஏணைய பேராசிரியா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த நிகழ்ச்சி மத்திய அரசு நிதி உதவியுடன் நடைபெற்றது.

