புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

Published on

சிதம்பரம் அரசு நந்தனாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்களுக்கு பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு மாநில முறைசாரா மற்றும் வயது வந்தோா் கல்வித் திட்ட இணை இயக்குநா் பொன்.குமாா் தலைமை வகித்து பயிற்சியை தொடங்கிவைத்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் சரஸ்வதி, ராமதாஸ், ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் இளவரசன் வரவேற்றாா். ஆசிரியா் பயிற்றுநா்கள் பூங்குழலி, காமாட்சி, கதிரொளி, மலா்க்கொடி ஆகியோா் எழுத்தறிவுத் திட்டங்கள், அதன் முக்கியத்துவம் குறித்து தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளித்தனா்.

இந்தப் பயிற்சியில் 150-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பயிற்சி ஏற்பாடுகளை ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பு ஆசிரியா் பயிற்றுநா்கள் மேற்கொண்டனா். எழுத்தறிவுத் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளா் கதிரொளி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com