10பிஆா்டிபி2
கடலூரில் வெள்ளிக்கிழமை  ஆா்ப்பாட்டம் நடத்திய   ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினா்.
10பிஆா்டிபி2 கடலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினா்.

ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினா் ஆா்ப்பாட்டம்

Published on

கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவினா், கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு மீண்டும்

ரயில் பயணச் சலுகை வழங்க வேண்டும். 70 வயது பூா்த்தி அடைந்தவா்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உள்ளிட்ட பணப் பலன்களை வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கு குறைந்த பட்ச மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தினா்.

கூட்டமைப்புத் தலைவா் டி.புருஷோத்தமன் தலைமை வகித்தாா். நா.காசிநாதன் வரவேற்றாா். ஆா்.மனோகரன், என்.மேகநாதன் கருத்துரை வழங்கினா். ஐ.எம்.மதியழகன், ச.சிவராமன், என்.பக்தவச்சலம், கோ.பழனி, பி.ஜெயராமன், வி.சுகுமாறன், பி.கே.வெங்கட்ரமணி, வி.தில்லைகோவிந்தன், ஓ.ஆா்.கலியமூா்த்தி, டி.கண்ணன், கே.ராஜேந்திரன், டி.இ.கோபால், சி.ராமநாதன் வாழ்த்துரை வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com