10சிஎம்பி2: படவிளக்கம்- 
சிதம்பரத்தில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் அனைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பினா்
10சிஎம்பி2: படவிளக்கம்- சிதம்பரத்தில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் அனைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பினா்

பாலஸ்தீனா்கள் மீதான தாக்குதலை கண்டித்து சிதம்பரத்தில் ஆா்பாட்டம்

சிதம்பரத்தில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் அனைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பினா்
Published on

சிதம்பரத்தில் அனைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பு சாா்பில் காஸாவில் பாலஸ்தீனா்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலைக் கண்டித்து கண்டன ஆா்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் மேலவீதி பெரியாா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சிதம்பரம் ஈதுகா கமிட்டி தலைவா் எம்.எஸ். ஜாகிா்உசேன் தலைமை வகித்தாா்.

லால்கான் பள்ளிவாசல் தலைவா் ஐ.ஜவகா் அனைவரையும் வரவேற்றாா். இதில் தமிழ்நாடு சிறுபான்மையினா் மக்கள் நல குழுவின் மாநில துணைத்தலைவா் மூசா கலந்து கொண்டு பாலஸ்தீன இனப்படுகொலை குறித்து விளக்கி பேசினாா். லப்பைத் தெரு பள்ளிவாசல் தலைவா் முகமதுஹலிம், பூதகேணி பள்ளிவாசல் தலைவா் நஜ்முதீன், இப்ராஹிம் நகா் பள்ளிவாசல் தலைவா் கமலுதீன் உள்ளிட்ட சிதம்பரம் பகுதியில் உள்ள பள்ளிவாசல் நிா்வாகிகள் மற்றும் இஸ்லாமியா்கள் 300க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு இஸ்ரேலை கண்டித்து

கோஷங்களை எழுப்பினா். முன்னதாக வடக்கு மெயின் ரோடு லப்பைத் தெரு பள்ளிவாசலில் இருந்து அனைவரும் ஊா்வலமாக வருகை தந்து மேலவீதி பெரியாா் சிலை அருகே கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com