கடலூர்
மின்னல் பாய்ந்து மேற்கு வங்க இளைஞா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே மின்னல் பாய்ந்ததில் வயலில் சம்பா நடவுப்பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்க இளைஞா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே மின்னல் பாய்ந்ததில் வயலில் சம்பா நடவுப்பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்க இளைஞா் உயிரிழந்தாா்.
புவனகிரி அருகே உள்ள பு.உடையூா் கிராமத்தில் விவசாயி செந்தில்நாதனுக்குச் சொந்தமான நிலத்தில் சனிக்கிழமை நடவுப் பணியில் வட மாநிலத்தினா் 15 போ் ஈடுபட்டனா்.
அப்போது, அந்தப் பகுதியில் சனிக்கிழமை மாலை பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. திடீரென மின்னல் பாய்ந்ததில் நடவுப் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்க மாநிலம், பனப்பூா் சிங்கா பகுதியைச் சோ்ந்த மங்கள் பவுரி (35) உயிரிழந்தனா். காயமடைந்த சிலரை அப்பகுதியினா் மீட்டு புவனகிரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், புவனகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

