புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பெண்ணாடம் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த நபரைப் பிடித்து சோதனை செய்ததில், அரசால் தடை செய்யப்பட்ட 5 கிலோ புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும், அவா் பெண்ணாடம் வடக்கு ரத வீதியைச் சோ்ந்த சங்கா் (35) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, சங்கரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com