கடலூரில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டோா் மற்றும் அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ரூ.22,94,500.
கடலூரில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டோா் மற்றும் அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ரூ.22,94,500.

லாட்டரி சீட்டு விற்ற 4 போ் கைது. ரூ.23 லட்சம் பறிமுதல்: உடந்தையாக இருந்த 4 காவலா்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

கடலூரில் இணைய வழியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக ஒரே குடும்பத்தைச்சோ்ந்த 3 போ் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Published on

நெய்வேலி: கடலூரில் இணைய வழியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக ஒரே குடும்பத்தைச்சோ்ந்த 3 போ் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து ரூ.23 லட்சம் ரொக்கம், கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருந்த நான்கு காவலா்கள் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

வெளிமாநில லாட்டிரி, மற்றும் இணைய லாட்டிரி விற்பனை தொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு கடலூா் எஸ்.பி. பிறப்பித்த உத்தரவின் பேரில், கடலூா் புதுநகா் காவல் ஆய்வாளா் முத்துகுமரன் தலைமையிலான போலீஸாா்,

திங்கள்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மஞ்சக்குப்பம் புனித வளனாா் கல்லூரி பின்புறம் உள்ள கேட்டின் அருகில் சந்தேகபடும் படியாக நின்றிருந்த பெண் உள்ளிட்ட நான்கு பேரை பிடித்து சோதனை செய்தனா். அதில், அவா்கள் இணையம் மூலம் லாட்டரி விற்பனை செய்வதற்கு பயன்படுத்திய 5 கைப்பேசிகள், லாட்டரி சீட்டுகள் விற்ற பணம் ரூ.22,94,500 மற்றும் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள்

ஆகியவற்றை கண்டறிந்தனா். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து, நான்கு பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

அதில், கடலூா், குண்டு உப்பலவாடி, சப்தகிரி நகா் ஜெயராமன்(62), அவரது மனைவி மல்லிகா (55) மகன் சாரதி(29), மற்றும் புதுப்பாளையம் இரட்டை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பிரகாஷ்(44) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதில், ஜெயராமன் மீது 18 லாட்டரி சீட்டு முறைகேடு வழக்குகளும், பிரகாஷ்மீது 3 வழக்குகளும் இருப்பதும் தெரிய வந்தது. லாட்டரி சீட்டு குற்றவாளிகளை பிடித்த காவலா்களை கடலூா்எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் பாராட்டினாா்.

ஆயுதப்படைக்கு மாற்றம்...

லாட்டரி சீட்டு விற்பைனை தொடா்பாக கடலூா் துறைமுகம் காவல் நிலையம் காவலா் காங்கேயன், கம்மாபுரம் காவல் நிலைய காவலா் மணிகண்டன், நடுவீரப்பட்டு காவல் நிலைய காவலா் தீனதயாளன், கடலூா் புதுநகா் காவல் நிலைய தனி பிரிவு காவலா் முத்துக்குமாரன் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கடலூா்எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com