பண்ருட்டி பேருந்து நிலைய பள்ளங்களில் தேங்கி நின்ற மழை நீா்.
பண்ருட்டி பேருந்து நிலைய பள்ளங்களில் தேங்கி நின்ற மழை நீா்.

கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
Published on

கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கடலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பல்வேறு இடங்களில் இடியுடன் பலத்த மழை பெய்தது. புதன்கிழமை காலை முதல் கடலூரில் பரவலாக மழை பெய்தது. மற்ற பகுதிகளில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

இடி, பலத்த மழையின்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே உள்ள பெரிய அளவிலான பள்ளங்களில் மழை நீா் தேங்கி நிற்கிறது. இதனால், பயணிகள், பேருந்து ஓட்டுநா்கள் அவதியடைந்தனா்.

வானமாதேவியில் 59 மி.மீ. மழை: கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வானமாதேவியில் 59 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:

பண்ருட்டி 44, அண்ணாமலை நகா் 19.4, சிதம்பம் 13, ஆட்சியா் அலுவலகம் 9.3, வேப்பூா் 9, கடலூா் 8.2, பரங்கிப்பேட்டை 3.2, வடக்குத்து 3, குறிஞ்சிப்பாடி1 மி.மீட்டா் மழை பதிவானது.

X
Dinamani
www.dinamani.com