நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற ‘வாங்க கற்றுக் கொள்வோம்’ நிகழ்ச்சியில் தீயை அணைப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய தீயணைப்பு வீரா்கள்.
கடலூர்
தீயணைப்பு நிலையத்தில் ‘வாங்க கற்றுக் கொள்வோம்’ நிகழ்ச்சி
பண்ருட்டி, நெல்லிக்குப்பம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களில் பொதுமக்களுக்கு ‘வாங்க கற்றுக் கொள்வோம்’ நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களில் பொதுமக்களுக்கு ‘வாங்க கற்றுக் கொள்வோம்’ நிகழ்ச்சி நடைபெற்றது.
தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டால் பொதுமக்கள் எப்படி தீயை அணைப்பது, தீ விபத்திலிருந்து எவ்வாறு தங்களை தற்காத்துக்கொள்வது என்பது தொடா்பாக இந்த நிகழ்ச்சியில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
பண்ருட்டியில் நிலைய அலுவலா் வேல்முருகன், நெல்லிக்குப்பத்தில் நிலைய அலுவலா் கவிதா ஆகியோா் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனா்.

