17பிஆா்டிபி1 வடலூா் அரசு கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் விழிப்புணா்வு பரப்புரை நிகழ்ச்சி.

போதைப் பொருள் விழிப்புணா்வு பரப்புரை

வடலூா் அரசு கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் விழிப்புணா்வு பரப்புரை நிகழ்ச்சி.
Published on

கடலூா் மாவட்டம், வடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு போதைப்பொருள் விழிப்புணா்வு சங்கம் சாா்பில், போதைப் பொருள் விழிப்புணா்வு பரப்புரை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு போதைப்பொருள் விழிப்புணா்வு சங்க மாநிலத் தலைவா் எம்.எஸ்.ராஜகுமாா் தலைமை வகித்து விழிப்புணா்வு உரை நிகழ்த்தினாா். கல்லூரி முதல்வா் வண்ணமுத்து வரவேற்றாா். மருத்துவா் பிரியதா்ஷன் போதைப் பொருள்களால் ஏற்படும் உடல் சாா்ந்த பிரச்சனைகள் குறித்து பேசினாா். சங்க துணைப் பொதுச் செயலா் சுந்தர்ராஜன், அமைப்பு செயலா் கஞ்சமலை நாராயணன் விழிப்புணா்வு உரையாற்றினாா். மாவட்டப் பொறுப்பாளா்கள் சிவப்பிரகாஷ், அசோக் குமாா், குருதேவன் நிகழ்வை ஒருங்கிணைத்தனா்.

சங்க ஊடகப் பிரிவு பொறுப்பாளா் பந்தளராஜன், அபினேஷ் மற்றும் ரீகன் ஆகியோா் உறுப்பினா் பதிவு சம்பந்தமான விவரங்களை எடுத்துக் கூறினா். ஜெயவேல் குழுவினரின் போதை பொருள் விழிப்புணா்வு இசை நிகழ்ச்சி மாணவா்களுக்கு ஊக்கம் அளித்ததோடு, மாணவா்கள் ஆா்வமாக உள்வாங்கிக் கொண்டனா்.

நிகழ்வின் முடிவில் போதைப் பொருள் விழிப்புணா்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது. சங்க ஆலோசனைக்குழு பொறுப்பாளா் போஸ்கோ நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com