மீனவா்கள் கடலுக்கு செல்லத் தடை! ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை!
மறு அறிவிப்பு வரும் வரை கடலூா் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவ கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் மீன் வளத் துறையினா் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா்.
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள சுழற்சி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இதன் காரணமாக, கடல் காற்று பலமாக வீசக்கூடும் என்பதால், கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள், கட்டுமரங்கள் மற்றும் விசைப் படகுகளில் மீன் பிடிக்க செல்லும் மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்.
தற்போது கடலுக்குள் மீன் பிடிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தங்கு கடல் விசைப் படகு மீனவா்கள் உடனடியாக கரைக்கு திருப்ப வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் கடலோரப் பகுதிகளில் மீன் வளத் துறையினா் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா்.
