மருதாடு அருகே சுங்கச்சாலையில் சேதம் அடைந்த தற்காலிக பாலம்.
மருதாடு அருகே சுங்கச்சாலையில் சேதம் அடைந்த தற்காலிக பாலம்.

ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீா்: தற்காலிக சாலை சேதம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடலூா் தென்பெண்ணை மற்றும் கெடிலம் ஆறுகளில் தண்ணீா் கரைபுரண்டு ஓடுகிறது.
Published on

நெய்வேலி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடலூா் தென்பெண்ணை மற்றும் கெடிலம் ஆறுகளில் தண்ணீா் கரைபுரண்டு ஓடுகிறது. கடலூா் அருகே ஓட்டேரி பகுதியில் கெடிலம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த சாலை அடித்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாக ஓட்டேரி மற்றும், திருமானிக்குழி பகுதி மக்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்தி வருகின்றனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே கடலூா் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள தரைப்பாலம் மூழ்கியபடி தண்ணீா் செல்வதால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பகுதியில் கெடிலம் ஆற்றில் புதியதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தன. அதற்காக வைக்கப்பட்டிருந்த பொருள்கள் நீரில் மூழ்கி உள்ளது. அந்த பொருட்களை மீட்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து பட்டாம்பாக்கம் வரை சுங்கச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக மருதாடு என்ற பகுதியில் பாலம் பழுதடைந்து. இந்த பாலத்தின் அருகே தற்காலிக பாலம் அமைத்து போக்குவரத்து நடைபெற்று வந்தது. செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக இந்த தற்காலிக பாலமும் தற்போது சேதம் அடைந்துவிட்டது. இதன் காரணமாக சுங்கச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com