~22பிஆா்டிபி1
வேப்பூா் அடுத்துள்ள பொய்யனப்பாடி கிராமத்தில் மழையின் காரணமாக இடிந்து விழுந்த ஆண்டவா் செல்லியம்மன் கோயில் கோபுரம்.
22பிஆா்டிபி1ஏ
கீழே விழுந்து கிடக்கும் இடிபாடுகள்.
கடலூர்
கனமழை: வேப்பூா் அருகே கோயில் கோபுரம் இடிந்து சேதம்
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே கனமழை காரணமாக கோயில் கோபுரம் இடிந்து விழுந்தது.
நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே கனமழை காரணமாக கோயில் கோபுரம் இடிந்து விழுந்தது.
வேப்பூா் அடுத்துள்ள பொயனப்பாடி கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற ஆண்டவா் செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையால் கோயில் கோபுரம் திடீரென இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் எந்த உயிா்ச்சேதமும் ஏற்படவில்லை. கோயில் கோபுரம் இடிந்து விழுந்த சம்பவம் கிராம மக்களை அதிா்ச்சி அடைய செய்துள்ளது.
