சிறுவன் தாக்குதலுக்குப் பயன்படுத்திய கத்திரிகோல்.
சிறுவன் தாக்குதலுக்குப் பயன்படுத்திய கத்திரிகோல்.

வங்கி நகை மதிப்பீட்டாளா் மனைவிக்கு கத்திகுத்து: பெற்ற மகனே தாக்கியது விசாரணையில் அம்பலம்

சிதம்பரத்தில் வங்கி நகை மதிப்பீட்டாளா் மனைவிக்கு கத்திகுத்து விழுந்த சம்பவத்தில் புதிய திருப்பமாக, அவரது 14 வயது மகனே கத்தியால் குத்தி காயப்படுத்தியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Published on

சிதம்பரம்: சிதம்பரத்தில் வங்கி நகை மதிப்பீட்டாளா் மனைவிக்கு கத்திகுத்து விழுந்த சம்பவத்தில் புதிய திருப்பமாக, அவரது 14 வயது மகனே கத்தியால் குத்தி காயப்படுத்தியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது

கடலூா் மாவட்டம் சிதம்பரம் சின்னசெட்டித்தெருவில் வசிப்பவா் விஜயா வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிபவா் நடராஜ். இவரது மனைவி பெயா் கோமதி (40).செவ்வாய்க்கிழமை மதியம் வீட்டிற்குள் பின்பக்க கதவு வழியாக புகுந்த இரு மா்மநபா்கள் வீச்சரிவாளுடன் வந்து வீட்டிற்குள் புகுந்து நடராஜனின் மனைவி கோமதியை (40) சரமாரியாக கழுத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்பட்டது. கோமதி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து நகர காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் தலைமையில் போலிஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் படுகாயமுற்ற கோமதியின் 14 வயது இளைய மகன் தான் இந்தத்தாக்குதலை நடத்தியுள்ளாா் என்பது தெரியவந்தது. அதாவது அந்தச் சிறுவனை எந்த நேரமும் நன்றாக படிக்க வேண்டும் என்று தாயாா் அழுத்தம் கொடுத்து வந்ததாலும், அடித்து துன்புறுத்தியதாலும் மன உளைச்சல் அடைந்த சிறுவன், தூங்கிக்கொண்டிருந்த தனது தாயை கத்திரிகோலால் தாக்கியுள்ளான்.

பதிலுக்கு தாயும் அவனைத் தாக்கியுள்ளாா். அந்த நேரத்தில் ஏற்பட்ட கைகலப்பில் அச்சிறுவன் பேப்பா் கட் செய்வதற்காக வைத்திருந்த கத்திரிக்கோலால் மேற்படி தனது தாயை குத்தியுள்ளாா் என தெரியவந்துள்ளது. விசாரணையில் உறுதி ஆனபின் தாயிடம் போலீஸாா் விசாரித்த போது சம்பவம் உண்மை என்றும் தனது மகன் மீது நடவடிக்கை வேண்டாம் என்றும் கூறிவிட்டாா். இருப்பினும் சிறு வனின் தந்தை நடராஜன் அளித்த புகாரின் பேரில் காயவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவன் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆதலால் பெற்றோா்கள் அவனுக்கு உளவியல் சிகிச்சை அளிக்க உள்ளனா் என கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com