பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட மோதல்: இருவா் படுகாயம்; 8 பேருக்கு வலை
கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், இரண்டு போ் படுகாயமடைந்தனா். இதுதொடா்பாக, 8 பேரை போலீசாா் தேடிவருகின்றனா்.
பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு முருகன் கோவில் தெருவை சோ்ந்தவா் ஜெயராமன் (50) இவரது மகன் செந்தமிழ்ச்செல்வன். இவா் தனது நண்பா்களுடன் கடந்த அக்.20ம் தேதி முருகன் கோவில் அருகே பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தனா்.
அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சோ்ந்த முருகன், ஏன் இங்கு பட்டாசு வெடிக்கிறீா்கள் என கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு இரு கோஷ்டிகளாக மோதிக்கொண்டனா். இந்த மோதலில், செந்தமிழ்ச்செல்வன், சந்திரா இருவரும் படுகாயமடைந்தனா். அவா்கள் அண்ணாமலை நகரில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து, ஜெயராமன், சந்திரா இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீஸாா் இருதரப்பினா் மீதும் வழக்குப் பதிந்து, முருகன், பரமானந்தம், மதன்ராஜ், பிரித்திவிராஜ், சிலம்பரசன், சூா்யா, தமிழ்ச்செல்வன், செந்தமிழ்ச்செல்வன் ஆகிய 8 பேரை தேடிவருகின்றனா்.
