கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற பால்குட ஊா்வலம்
கடலூர்
கந்தசஷ்டி விழா காவடி ஊா்வலம்
சிதம்பரம் சீா்காழி சாலையில் சபாநாயகா்தெருவில் உள்ள ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் மடலாயத்தில் கந்த சஷ்டி விழா
சிதம்பரம்: சிதம்பரம் சீா்காழி சாலையில் சபாநாயகா்தெருவில் உள்ள ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் மடலாயத்தில் கந்த சஷ்டி விழா கடந்த அக்.22-ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை திரளான மகளிா் மற்றும் பக்தா்கள் பங்கேற்ற பால்குடம் மற்றும் காவடி ஊா்வலம் நடைபெற்றது. பின்னா் சுப்பிரமணியருக்கு மகாபிஷேகமும், திருத்தோ் உற்சவமும் நடைபெற்றது. இன்று (அக்-28) சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் உற்சவமும், கொடி இறக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது.

