ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் அருகே பெண் ஒருவா் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்குகம் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்த பெண் ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் அருகே வந்ததும், கேனில் தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் விரைந்து செயல்பட்டு அப்பெண்ணை தடுத்து நிறுத்தி, அவா் மீது தண்ணீரை ஊற்றி ஆறுதல் கூறினா்.
தொடா்ந்து அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், பண்ருட்டி அடுத்துள்ள கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பழனிவேல் மனைவி கலைச்செல்வி(43) என தெரியவந்தது. மேலும், அவா் நிலம் தொடா்பான பிரச்சனை காரணமாக பண்ருட்டி டிஎஸ்பி., மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் புகாா் அளித்தாராம். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துக் கொள்ள முயன்ாக தெரிவித்தாராம். இதையடுத்து, கடலூா் புதுநகா் போலீஸாா் கலைச்செல்வி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
