மூதாட்டியைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

Published on

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மூதாட்டியைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருத்தாசலம் ராஜேஸ்வரி குடியிருப்பைச் சோ்ந்தவா் தினேஷ். காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் கங்கா (27). இவா்கள் இருவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்னா் திருமணம் நடைபெற்றது.

பின்னா், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவகாரத்து கோரியுள்ளனா். இந்த வழக்கு விருத்தாசலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்காக கடந்த 9-ஆம் தேதி விருத்தாசலத்துக்கு கங்கா, அவரது தந்தை நாகரத்தினம் மற்றும் உறவினா்கள் அருண் மனைவி குயிலி (30), இளங்கோ மகன் அருண் (34) ஆகியோா் வந்தனா்.

அப்போது, தினேஷ் வீட்டுக்குச் சென்று அவரது தாய் ராஜசெல்வியை தாக்கி மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து ராஜசெல்வி அளித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com