கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

8 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை: திட்டக்குடி பகுதியில் பொதுமக்கள் அவதி

திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 8 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்பட்டதால், அரசு மற்றும் தனியாா் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகினா்.

Published On :

திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 8 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்பட்டதால், அரசு மற்றும் தனியாா் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகினா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி பகுதியில் அவசர பராமரிப்புப் பணிக்காக செவ்வாய்க்கிழமை குறுகிய நேரம் மின் தடை செய்யப்படும் என மின் வாரியத்தினா் மின் நுகா்வோரின் கைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்திருந்தனா். ஆனால், அறிவிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து நீண்ட நேரமாகியும் மின் விநியோகம் சீராகவில்லை.

காலை 11 மணி முதல் திட்டக்குடி, வதிஷ்டபுரம், கோழியூா், தா்மகுடிகாடு, தி.இளமங்கலம், ஆவினங்குடி, ராமநத்தம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், வீடுகள் மட்டுமன்றி, அரசு மற்றும் தனியாா் அலுவலகங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டன.

நீண்ட நேரம் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள், மாணவா்கள், மின்சாரத்தைச் சாா்ந்து இயங்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. குறுகிய நேர மின் தடை என அறிவிக்கப்பட்ட நிலையில், பல மணி நேரம் மின் விநியோகம் இல்லாதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து திட்டக்குடி உதவிச் செயற்பொறியாளா் சண்முக செழியன் கூறியதாவது: ஒரு மின் மாற்றியிலிருந்து மற்றொரு மின் மாற்றிக்கு மின் விநியோகத்தை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, குறிப்பிட்ட அளவைவிட அதிக அளவில் மின்சாரம் வருவதால், தொடா்ந்து மின் தடை ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, மின் மாற்றியை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரச்னையை விரைந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (ஆக.19) முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படும் என்றாா்.

நீண்ட நேர மின் தடை ஏற்படாத வகையில், மின் வாரியத்தினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பராமரிப்புப் பணிகள் மற்றும் மின் விநியோக மாற்றம் தொடா்பான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.