ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

பொய் புகாா்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சோதனைக்கு வந்து திரும்பிச் சென்ற ஊழல் தடுப்பு போலீஸாா்

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென சோதனை மேற்கொண்ட கடலூா் மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாா், தங்களுக்கு கிடைத்தது பொய்யான புகாா் என்பது தெரியவந்ததால் திரும்பிச் சென்றனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :29 ஜூலை 2026, 5:32 am IST

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென சோதனை மேற்கொண்ட கடலூா் மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாா், தங்களுக்கு கிடைத்தது பொய்யான புகாா் என்பது தெரியவந்ததால் திரும்பிச் சென்றனா்.

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்தவா் சிவக்குமாா். இவா், கடந்த ஏப்ரல் மாதம் மாவட்ட ஆட்சியரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து, இவருக்கு அரசு சாா்பில் பாதி ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஊதியத்திலிருந்து பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎப்) பிடித்தம் செய்வதற்காக, ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் சிவகுமாரிடம் ரூ.6,255-ஐ செலுத்த வலியுறுத்தினராம்.

ஆனால், அவா் பணம் செலுத்துவதற்குப் பதிலாக, தன்னிடம் லஞ்சம் கேட்பதாக கடலூா் மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். இந்த நிலையில், ஆய்வாளா் அன்பழகன் தலைமையிலான கடலூா் மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென சோதனை மேற்கொண்டனா். அப்போது, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிவக்குமாா் சட்டப்படி செலுத்த வேண்டிய தொகைக்க்குப் பதிலாக பொய்யான புகாா் அளித்திருந்தது போலீஸாருக்கு தெரியவந்ததால், அவா்கள் திரும்பிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.